ETV Bharat / bharat

கஞ்சா போதையில் பசுவிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.. மர்ம நபருக்கு வலைவீச்சு

author img

By

Published : Jan 13, 2023, 10:06 PM IST

கஞ்சா போதை தலைக்கேறி பசுவை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் புதுச்சேரியில் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

ஏனாம்: புதுச்சேரி, ஆந்திரா மாநில எல்லையில் ஏனாம் நகரம் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நகரமாக ஏனாம் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் ஏனாம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் விவசாயி பொககு ஈஸ்வர ராவ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.

தென்னந்தோப்புடன் சேர்த்து மாட்டுக் கொட்டகையையும் ஈஸ்வர ராவ் வைத்துள்ளார். சம்பவத்தன்று தென்னந்தோப்புக்கு வந்த ஈஸ்வர ராவ் கால்கள் கட்டப்பட்ட நிலையில், பசு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அவர் போலீசுக்கு புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கால்நடை மருத்துவர் உதவியுடன் பசு உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நள்ளிரவில் தென்னந்தோப்புக்குள் நுழைந்த மர்ம நபர், கஞ்சா போதையில் பசுவிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுவின் நான்கு கால்கள் மற்றும் கழுத்தை கட்டிய மர்ம நபர், கஞ்சா போதையில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பசு உயிரிழந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற விலங்கு வதை கொடுமைகள் மென்மேலும் தொடராமல் இருக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த கஞ்சா பயன்படுத்தியதற்கான தடயங்களை போலீசார் கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் தண்டவாளத்தில் தூக்கம்.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.