ETV Bharat / bharat

ஆய்வுக் கூட்டத்தில் தென் மாநிலங்களை பாரட்டிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

author img

By

Published : Jan 29, 2022, 5:15 AM IST

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

பரஸ்பர புரிதல், சிறந்த நடைமுறைகள் பகிர்வு மற்றும் மத்திய மாநில அரசுகள் இடையே கூட்டுறவு செயல்பாடு ஆகியவை கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கோவிட்-19 தயார்நிலை மற்றும் தேசிய கோவிட் 19 தடுப்பூசித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமை செயலாளர்கள், நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.

அப்போது மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தேவையான கோவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாநில அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாண்டவியா, "தடுப்பூசி போடத் தகுதியானவர்களில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74 சதவீதம் பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் இது உலகளாவிய வெற்றி. இது தவிர முன்னெச்சரிக்கை தடுப்பூசி மற்றும் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாதம் தொடங்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்துக்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

கோவிட் மேலாண்மையில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் போன்ற 5 முக்கியமான விஷயங்களைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

கோவிட் மேலாண்மையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும். கோவிட் தொற்றுப் பரவல் குறித்த தகவல்களை சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும். பரஸ்பர புரிதல், சிறந்த நடைமுறைகள் பகிர்வு மற்றும் மத்திய மாநில அரசுகள் இடையே கூட்டுறவு செயல்பாடு ஆகியவை கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவியது" எனவும் கூறினார்.

இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 29 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.