ETV Bharat / bharat

டிவிட்டரில் இருந்து டிரம்ப் நீக்கம் திட்டமிட்டு நடந்ததா?.. டிவிட்டர் பைல்ஸ் 3.0 வெளியீடு

author img

By

Published : Dec 10, 2022, 5:10 PM IST

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

டிவிட்டர் பைல்ஸ் அறிக்கையின் 3 சீசனை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் இருந்து எலான் மஸ்க் நீக்கப்பட்டது, அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் கேபிடலில் நடந்த கலவரம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலை கொடுத்து வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக டிவிட்டர் பைல்ஸ் 3.0 அறிக்கையை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் இருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிவிட்டர் பைல்சின் மூன்றாவது பதிப்பில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அமெரிக்க அதிபர் பதவியேற்றுக் கொண்ட ஜனவரி 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை பத்திரிக்கையாளர் மேட் தைபி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டிவிட்டர் மற்றும் பெடரல் ஏஜென்சி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் டிரம்பின் டிவிட்டர் கணக்கு இடைநீக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் ஊழியர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொண்டதை ஸ்கிரீன்ஷாட்டுகளை வெளியிட்ட தைபி, டிவிட்டரின் கொள்கைகளை மீறி அந்நிறுவன ஊழியர்கள் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வருங்கால அதிபர்களையும் இடைநீக்கம் செய்ய ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாகவும், அது அதிபர் ஜோ பைடனுக்கும் பொருந்துமென தைபி தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஊடக நிறுவனங்களின் தேர்தல் தலையீடு என்பது ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வெளிப்படையாக குறைமதிப்பீடு செய்வதை உட்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிபர் பைடனுக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கும் விழாவில் ஏற்பட்ட கலவரம், கேபிடல் கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தது உள்ளிட்டப் பல்வேறு தகவல்கள் டிவிட்டர் பைல்ஸ் 3.0வில் வெளியாகி உள்ளன.

ட்விட்டர் பைல்ஸ் 3.0 அறிக்கைக்கு, டிபிளாட்பார்மிங் தி பிரஸ்சிடண்ட் என டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் பெயர் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் வடிவில் 6 அடி உயர பிரமாண்ட கேக் - திருச்சியில் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.