ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மார்ச் 1ஆம் தேதிக்கான ராசி பலன்கள்

author img

By

Published : Mar 1, 2023, 6:28 AM IST

Etv Bharat
Etv Bharat

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய பலன்களைக் காணலாம்.

மேஷம்: இன்று நீங்கள், அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். அழகுப் பொருட்கள் தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நீங்கள் விரும்பலாம். ஆனால், முடிவெடுப்பது சிறிது கடினமாக இருக்கும். சாத்தியமான வாய்ப்புகளை ஆராய்ந்து, முடிவுகளை மேற்கொள்ளவும்.

ரிஷபம்: இன்றைய தினம், நீங்கள் நல்ல முறையில் உங்களுக்கான நேரத்தை செலவழிப்பீர்கள். மற்ற நாட்களைப் போல் அல்லாமல், இன்று நீங்கள் அமைதியாக இருந்து புத்துணர்வை பெறவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் விருந்து அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொள்வீர்கள். ஏதேனும் ஒரு, வித்தியாசமான சுவை கொண்ட, உணவை ருசித்து பார்க்கும் ஆர்வம் இருக்கும்.

மிதுனம்: இன்று முழுவதும், நீங்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள். நேர்மறையான என் கண்ணோட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும். நீங்கள் இன்று உங்கள் விருப்பப்படி செயல்பட்டு, மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்வீர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அதற்கு பலன் கிடைப்பதோடு நிம்மதியாகவும் உணர்வீர்கள்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்கள் முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்படக்கூடும் வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் இருப்பவர்கள் உடன் கவனமாக பழகவும். சூழ்நிலைகளை புன்னகையுடன் எதிர் கொள்ளவும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் வேலை சுமுகமாக நடைபெறுவதோடு, உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.

கன்னி: உங்களுக்காக, தனிப்பட்ட முறையில் நேரம் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது முக்கியம். பணியிடத்தில், மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடித்து, கடினமான சூழ்நிலைகளை கையாளவும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படக்கூடும்.

துலாம்: நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்டப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இது நீதிமன்றம் மூலமாகவோ அல்லது பரஸ்பர புரிந்துணர்வு காரணமாகவோ இருக்கலாம். வேலைப்பளுவை பொருத்தவரை எப்பொழுதும் போல் இருக்கும். பிரச்சினையான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க, சிறந்த வகையில் திட்டம் தீட்ட உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

விருச்சிகம்: இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். கூடுதல் பணிச்சுமை மற்றும் பொறுப்புகளின் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் மாலையில், சிறிது ஓய்வு கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது புத்துணர்வைக் கொடுக்கும்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சச்சரவுகளும் எதிர்பார்ப்புகளும் அடங்கிய நாளாக இருக்கும். உங்கள் மீது தங்களது கருத்துக்களை திணிக்க விரும்பும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருக்கவும். பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்டு, அதனை ஏற்றுக் கொண்டால், சுமுகமான வகையில் சச்சரவுகளை தீர்க்கலாம்.

மகரம்: இன்றைய தினத்தில், வேலைப்பளுவின் காரணமாக நீங்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாகவும் உற்சாகம் இன்றியும் உணர்வீர்கள். இது போட்டி நிறைந்த உலகம் என்பதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களை வீழ்த்தும், வாய்ப்புகளுக்காக உங்களுக்கு போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எச்சரிக்கையுடன் திறமையாக செயல்பட்டு, அவர்களை வெற்றி காணவும்.

கும்பம்: மாணவர்களைப் பொருத்தவரை, பரிட்சை முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, உங்களது புகழ் பாதிக்காத வண்ணம் செயல்படவும். மக்களை மனிதாபிமானத்துடனும் அன்புடனும் அணுகவும்.

மீனம்: ஈடுபாட்டுடன், இடைவிடாமல் கடுமையாக உழைப்பவர்களுக்கு, இன்று சிறந்த நாளாக இருக்கும். இன்று பணியில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள். கடவுளின் ஆசியால் வெற்றி கிடைக்கும். அதனால் கடுமையாக உழைத்து, தோல்வியை கண்டு மனம் துவளாமல் இருக்கவும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: பிப்ரவரி 28ஆம் தேதிக்கான ராசி பலன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.