ETV Bharat / bharat

திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

author img

By

Published : Sep 26, 2022, 7:54 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Tirumala
Tirumala

அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதனால், இந்தாண்டு திருப்பதி பிரம்மோற்சவத்தை விமரிசையாக கொண்டாட திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் ஏழுமலையான் தினமும் ஒரு வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா வருவார்.

நாளை பெத்த சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அடுத்தடுத்த நாட்களில் சின்ன சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காட்சியளிப்பார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை முதல் பத்து நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள் என்பதால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பகல் இரவு நாளில் பிரமிப்பூட்டிய பத்மநாபசாமி கோயில் - கோபுரத்தின் வாதில்களில் அதிசய ஒளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.