ETV Bharat / bharat

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உளவாளி மாலிக் ஜம்முவில் கைது; NIA தீவிர விசாரணை

author img

By

Published : May 21, 2023, 10:44 PM IST

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உளவாளி மாலிக் குப்வாராவில் கைது
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உளவாளி மாலிக் குப்வாராவில் கைது

இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை தீவிரவாத இயக்கத்திற்க்கு வெளியிட்ட முகமது உபைத் மாலிக் என்பவரை தேசிய புலனாய்வு நிறுவனம் கைது செய்துள்ளது.

ஸ்ரீநகர்: இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை தீவிரவாத இயக்கத்திற்கு வெளியிட்ட முகமது உபைத் மாலிக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று (மே 21) வடக்கு ஜம்மு குப்வாராவில் கைது செய்துள்ளது. நாட்டின் ரகசியம் மற்றும் அதன் அமைதி குறித்தும் தேசிய புலனாய்வு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. நாட்டின் அமைதியை சீரழிக்கும் தீவிரவாத செயல்களை எதிர்க்கும் நோக்கத்தில் முகமது உபைத் மாலிக்கின் இந்த கைது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மாலிக் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைப் பற்றிய செய்திகளை உளவு பார்த்து, தீவிரவாத இயக்கத்திற்கு தெரியப்படுத்தி வந்துள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ, (NIA) ஜம்முவில் பதுங்கி இருந்த மாலிக்கை இன்று சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து மாலிகின் வீட்டை சோதனை செய்த போது சந்தேகப்படும் படியான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாலிகின் மீது விசாரணை மேற்கொண்ட போது, முன்னதாகவே இவர் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரி கூறுகையில், “தீவிரவாத பட்டியலில் முன்னதாகவே மாலிக் தேடப்பட்டு வருகிறார். இவர் தற்போது இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமதிற்கு துப்பு கொடுத்துள்ளார். இதனால், நாட்டில் பல்வேறு தீவிரத செயல்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் இவர் தங்கியிருந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட போது ஆயுதங்கள், வெடிகுண்டுகள், கட்டுகட்டாக பணம் என நிறைய இருந்தன. இவை அனைத்தும் சந்தேகத்தின் அடிப்படையில் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இவர்கள் திட்டமிட்டது குறுகிய அளவில் தாக்கம் கொண்டாலும், அவை தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோல, மாலிக் கைது செய்யப்பட்ட போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காட்டும் பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்களை அவரிடம் இருந்து மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

இதையும் படிங்க: G20:காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்; தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.