கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியான ''தி கேரளா ஸ்டோரி''!
Published: May 5, 2023, 7:23 PM


கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியான ''தி கேரளா ஸ்டோரி''!
Published: May 5, 2023, 7:23 PM

பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கிடையே ''தி கேரளா ஸ்டோரி'' திரைப்படம் கேரளாவில் இன்று திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.
கேரளம்: டிரெய்லர் வெளியானது முதல் சர்ச்சைக்குள்ளான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அதில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பிறகு, தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இத்திரைப்படம் இன்று கேரள மாநிலத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கேரளாவில் இன்று 20 சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியானதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு திரையரங்குகளின் முன் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையும் படிங்க: KSRTC Woman Attacked: கேரள அரசு பேருந்தில் தமிழக பெண்ணுக்கு கத்திகுத்து.. கேரள இளைஞர் தற்கொலைக்கு முயற்சி!
போராட்டத்தின் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்குகள் மோப்ப நாயுடன் சோதனை செய்யப்பட்ட பின் காட்சிகள் தொடங்கியது. ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோழிக்கோட்டில் தேசிய இளைஞரணி காங்கிரஸ் மற்றும் சகோதரத்துவ இயக்கம் சார்பில் இளைஞர்கள் பேரணி நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேரிகேடு எனப்படும் தடுப்பினை, தள்ளி பிரச்னை செய்ய முயன்றதை அடுத்து அவர்கள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
