கரோனா தொற்றின் முதல், இரண்டாவது அலை தாக்கத்தில் இருந்து மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய வரும் நிலையில், புதியதாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் இப்போது பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமைக்ரான் தொற்றைத் தடுக்க, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளது. மேலும், பயணிகள் அனைவருக்கும் விமான நிலையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை - விசாகப்பட்டினம்
34 வயதான பயணி ஒருவர் அயர்லாந்து நாட்டில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் மேற்கொண்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில், கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
இதையடுத்து, அவர் மும்பையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் விஜயநகரத்தில் மேற்கொண்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
15இல் ஒருவருக்கு ஒமைக்ரான்
இதனால், அவரது பரிசோதனை மாதிரிகள் ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டு மரபணு வரிசைப்படுத்துதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு உருமாறிய கரோனா தொற்று வகையான ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.
அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை. அவருக்கு நேற்று (டிசம்பர் 11) மீண்டும் கரோனா தொற்று மறுப்பரிசோதனை செய்திதல் கரோனா தொற்று தென்படவில்லை.
இதுவே, ஆந்திர மாநிலத்தில் பதிவாகும் முதல் ஒமைக்ரான் தொற்று. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 15 பேருக்கு கரோனா உறுதயானதை அடுத்து, அனைவரின் மாதிரிகளும் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு ஹைதாரபாத் அனுப்பப்பட்டது. அதில் ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
எண்ணிக்கை 35 ஆக உயர்வு
மேலும், ஒமைக்ரான் குறித்த ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தொற்று பரவல் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும்படியும் ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞனுக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் நேற்று (டிசம்பர் 10) ஒரு ஒமைக்ரான் தொற்று பதிவாகி இருந்தது.
தற்போது, ஆந்திரா, சண்டிகர் என தலா ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலம் முடியவில்லை - டாடா நிறுவன இயக்குநர் எச்சரிக்கை