ETV Bharat / bharat

தெஹ்ரீக்-இ-ஹுரியத்; தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 5:46 PM IST

tehreek-hurriyat-kashmir-separatist-group-headed-by-syed-ali-shah-geelani-banned-by-centre
ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை தடை செய்த அமைப்பாக மத்திய அரசு அறிவிப்பு..!

Tehreek-e-Hurriyat Banned in India: பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: ஜம்மு - காஷ்மீரில் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பரப்புவதாகவும் தடை செய்யப்பட்ட அமைப்பாக தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை இன்று (டிச.31) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பை மறைந்த சையத் அலி ஷா கிலானி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புவதாகவும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, TeH அமைப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

  • The ‘Tehreek-e-Hurriyat, J&K (TeH) has been declared an 'Unlawful Association' under UAPA.
    The outfit is involved in forbidden activities to separate J&K from India and establish Islamic rule. The group is found spreading anti-India propaganda and continuing terror activities to…

    — Amit Shah (@AmitShah) December 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு சட்ட விரோத அமைப்பாக யு.ஏ.பி.ஏ (UAPA - The Unlawful Activities (Prevention) Act, 1967.) சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு எடுத்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவிற்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் கருத்துக்களைப் பரப்புவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சதவீதம் கூட இடம் அளிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தனது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பின் தலைவராக மறைந்த சையத் அலி ஷா கிலானி இருந்தார். இவர் சிறையிலுள்ள மசரத் ஆலம் பட் என்பவரால் தேர்வு செய்யப்பட்டவர் எனவும், ஆலமின் கட்சியான 'முஸ்லிம் லீக் ஆஃப் ஜம்மு காஷ்மீர்' தடை செய்யப்பட்ட அமைப்பாக டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரவீன் வசிஸ்தா கூறும்போது, "தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது தொடர்பாக இன்று (டிச.31) அரசிதழில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தெரிவித்துள்ள அறிவிப்பின்படி, "இந்தியாவிலிருந்து ஜம்மு - காஷ்மீரைப் பிரித்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதே TeH நோக்கம். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது, இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கல் வீசுவது, பாகிஸ்தான் அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக நிதி திரட்டுவது, இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்துவது மற்றும் இந்தியாவில் அரசியலமைப்புக்கு அவமரியாதை செய்வது போன்ற செயல்களில் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்ற ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே தேசவிரோத உணர்வுகளும், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் பரப்ப வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.