ETV Bharat / bharat

13 வயதில் 56 நிறுவனங்களுக்கு சிஇஓ - வளர்ந்து வரும் மார்க் ஸக்கர்பர்க்...

author img

By

Published : Aug 3, 2022, 11:41 AM IST

13 வயதில் 56 கம்பேனிகளுக்கு சிஇஓ
13 வயதில் 56 கம்பேனிகளுக்கு சிஇஓ

பீகாரில் 13 வயதான 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் 56 நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம், ஒரு நாளில் 18 மணிநேரம் உழைக்கும் அந்த சிறுவன் குறித்த சிறுதொகுப்பு.

முசாபர்பூர்: பீகாரின் முசாபர்பூர் மாவட்டதில் உள்ள அம்மா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சூர்யன்ஷ் குமார் (13). இவர் கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, தனது முதல் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 56 ஆன்லைன் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.

அரைமணி நேரத்தில் டெலிவரி: 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு எப்படி நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது என்று கேட்டால்,"ஆன்லைனில் எனக்கு தேவையான பொருளை தேடும்போதுதான் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் வந்தது. இதுகுறித்து தந்தையிடம் கூறினேன். என் தந்தை மிகவும் உற்சாகப்படுத்தினார். மேலும், என்னுடைய முழுமையான திட்டத்தை பவர்பாயிட் பிரசென்டேஷனில் விளக்கும்படி கூறினார்.

முழுமையாக விளக்கி அவரின் ஒப்புதலுடன் என் முதல் இ-காமர்ஸ் நிறுவனத்தை தொடங்கினேன். 30 நிமிடங்களில் மக்களுக்கு தேவையான பொருள்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். விரைவில் இந்த சேவையை தொடங்க உள்ளோம்" என்றார்.

நிறுவனர், சிஇஓ: மேலும், சூர்யன்ஷ் காண்டக்ட் பிரைவெட் லிமிடெட் என்ற பெயரில், மொத்தம் 56 ஸ்டார்-அப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அனைத்து நிறுவனங்களுக்கும் நிறுவனர், தலைமை செயல் அதிகாரியாக சூர்யன்ஷ் செயலாற்றி வருவதாகவும், மேலும், 5 பேர் இணை - நிறுவனராக உள்ளதாகவும் சூர்யன்ஷ் தெரிவித்தார்.

அவரின் ஆன்லைன் நிறுவனங்களில், shaadiKijiye.com என்ற நிறுவனமும் ஒன்று. இதில், உங்களின் வாழ்க்கை துணையை அடையாளம் கண்டுகொள்ளலாம் என சூர்யன்ஷ் கூறுகிறார். மேலும், Mantra Fry என்ற கிரிப்டோகரன்சி சார்ந்த நிறுவனத்தையும் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். பள்ளி படிப்பு குறித்து அவர் கூறுகையில்,"10ஆம் வகுப்பு படித்து வருகிறேன். ஆனால், என்னால் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனது நிறுவனங்களுக்காக 18 மணிநேரம் வேலை செய்கிறேன்.

பள்ளிக்கு செல்லவில்லை, ஆனால்...: இதனிடையே என் பள்ளி படிப்பையும் பயின்று வருகிறேன். பள்ளிக்கு செல்லாவிட்டாலும், பள்ளி நிர்வாகம் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது" என்றார். மேலும், இதுவரை எனது நிறுவனங்களில் இருந்து எந்த வருமானமும் வருவதில்லை எனவும், விரைவில் வருமானம் ஈட்டும் அளவிற்கு வளர்வேன் என்றும் சூர்யன்ஷ் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். அவருடைய நிறுவனங்களில் நிகர மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யன்ஷின் இந்த செயல்பாடுகள் குறித்து அவரின் தந்தை சந்தோஷ் குமார்,"சூர்யன்ஷ் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக உள்ளார். எங்களது மகனின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எனது 13 வயதில் நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டே, ஆடிட்டிங் துறையில் நுழைந்தேன். அதேபோன்று, எனது மகனும் செயலாற்றுவது மகிழ்ச்சியே" என்றார். சந்தோஷ் குமார், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் ஐக்கிய நாடுகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது.

சூர்யன்ஷின் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தை, இ-காமர்ஸ், கிரிப்டோகரன்சி, மேட்ரிமோனி சார்ந்தவையாகவே உள்ளன. குடும்பத்தினர் அனைவரும் குறிப்பாக தந்தை தனக்கு ஊக்கம் அளித்து வருகிறார் என்றும் இதுவே தன்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது என்றும் சூர்யன்ஷ் தெரிவித்துள்ளார். சூர்யன்ஷ் ஏற்கெனவே ஒரு புத்தக்கத்தை எழுதியுள்ள நிலையில், தற்போது நிதி சார்ந்த ஒரு புத்தகத்தை எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு - அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய மாணவர்களால் வெளிவந்த உண்மை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.