ETV Bharat / bharat

சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

author img

By

Published : May 17, 2022, 7:36 PM IST

Sunny leone
Sunny leone

சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாண்டியா (கர்நாடகா): கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹோமன்னஹேலி கிராமத்தில் சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து டி.கே சிக்கன் சென்டர் சார்பில் மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதையடுத்து, சன்னி லியோன் ரசிகர்களுக்கு சிக்கன் 10 சதவீத சலுகையில் விற்பனை செய்யப்பட்டது.

இது சன்னி லியோனின் பிறந்த நாளான மே13ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இந்தச் செய்தி சன்னி லியோனின் காதுகளை எட்டிய நிலையில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “ஓ மை கடவுளே. என்னால் நம்ப முடியவில்லை. நானும் எனது ரத்தத்தை தானம் செய்வேன். மிக்க நன்றி. நீங்கள் என்னை ஸ்பெஷலாக விரும்புகிறீர்கள். நானும் உங்களை நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தைப் பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.