ETV Bharat / bharat

டெல்லி ஷ்ரத்தா கொலை: பூனாவாலாவின் ஜாமீன் மனு மீது விசாரணை

author img

By

Published : Dec 16, 2022, 10:52 AM IST

டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு குற்றவாளி பூனாவாலாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது.

பூனாவாலாவின் ஜாமீன் மனு மீது விசாரணை
பூனாவாலாவின் ஜாமீன் மனு மீது விசாரணை

டெல்லி: நாடு முழுவதும் பெரும் அதிக்ச்சியை ஏற்படுத்திய ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 16) நடக்கிறது. இந்த வழக்கு காலை 10 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளதாக பூனாவாலாவின் வழக்கறிஞர் எம்.எஸ்.கான் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.கான், "இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அஃப்தாப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் டெல்லி போலீசாரின் கூற்றுக்கும் அடிப்படை உண்மைக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

இந்த முரண்பாடுகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால், பூனாவாலா ஷ்ரத்தாவின் உடலை பல துண்டுகளாக வெட்டவில்லை எனத் தெரிவித்தார். இதனிடையே ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.