ETV Bharat / bharat

Booster Dose: பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை

author img

By

Published : Dec 28, 2021, 7:02 PM IST

booster dose of Covid-19 vaccine
booster dose of Covid-19 vaccine

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

டெல்லி: ஒமைக்ரான் தொற்று காரணமாக பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநில சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர், இணை நோயாளிகள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இணை நோய்கள் இருப்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல்கள் பரவிவருகிறது. இந்தத் தகவல் பொய்யானது. இணை நோயாளிகள், மருத்துவரிடம் ஆலோசனையை பெற்றுக் கொள்ள மட்டுமே அரசு அறிவுறுத்தியது. எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூடுதல் தடுப்பூசிக்காக சான்றிதழ் ஏதும் சமர்பிக்க தேவையில் எனத் தெரிவித்தார்,

இதையும் படிங்க: IIT Kanpur: தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குங்கள், ஆனால் ரோபோக்களாக மாறிவிடாதீர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.