ETV Bharat / bharat

மனைவியை விவாகரத்து செய்த சச்சின் பைலட்; வேட்புமனுவில் வெளியான விவகாரம்.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:02 PM IST

வேட்புமனு தாக்கல் செய்த சச்சின் பைலட்
வேட்புமனு தாக்கல் செய்த சச்சின் பைலட்

sachin pilot divorce: ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் டோங்க் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று(அக்.31)தாக்கல் செய்தார். அதில் தனது மனைவியும், ஜம்மு காஸ்மீரின் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், டோங்க் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று (அக்.31) வேட்புமனு தாக்கல் செய்தார். நவம்பர் மாதத்தில் மத்திய பிரதேஷம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன.

மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (அக்.30) துவங்கப்பட்ட நிலையில், நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. பின்பு நவம்பர் 7 ஆம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். தொடர்ந்து நவம்பர் 9 ஆம் தேதி வரை மனுக்களைத் திரும்பப் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று(அக்.30) முதல் தொடங்கிய நிலையில், டோங்க் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் இன்று(அக்.31) அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த சச்சின் பைலட்
வேட்புமனு தாக்கல் செய்த சச்சின் பைலட்

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, பூதேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பிறகு தனது ஆதரவாளர்களுடன் படா குவான் பகுதியில் இருந்து டோங்க் நகரிலுள்ல படேல் சௌக் வரை ஊர்வலம் சென்ற பின்னரே மனுவை தாக்கல் செய்தார்.

சச்சின் பைலட் தாக்கல் செய்த வேட்புமனு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. அதில், துணைவியர் காலத்தில் தனக்கு விவாகரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டது என்றும் தன்னைச் சார்ந்தவர்கள் என்ர காலத்தில் அவரது இரு மகன்களான ஆரண் மற்றும் விஹான் ஆகிய இருவரையும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இவர்களின் விவகரத்து குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாத நிலையில், இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் பூதாகரமாகியுள்ளது.

சச்சின் சாரா விவாகரத்து
சச்சின் சாரா விவாகரத்து

முன்னதாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட போது, இவரது மனைவி சாராவை குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, ராம் நிவாஸ் பாஹ்-ல் பதிவி ஏற்கும் போது அவரது மனைவி சாராவும் உடனிருந்தது குறிப்பிடதக்கது.

பைலட் மற்றும் ஜம்மு காஸ்மீரின் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லாவின் மகளான சாரா ஆகிய இருவரும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வந்த நிலையில், இருவரும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இவர்களின் திருமண வாழ்க்கை 10 வருடத்துடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பைலட் மற்றும் சாரா அப்துல்லாவின் விவாகரத்து குறித்து பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.