இஸ்ரோவின் புதிய தலைவராகும் சோம்நாத், விடைபெறுகிறார் சிவன்

author img

By

Published : Jan 12, 2022, 8:08 PM IST

S Somnath

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக கேரளாவைச் சேர்ந்த எஸ் சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பதவிவகித்துவருகிறார்.

1963ஆம் ஆண்டு பிறந்த சோம்நாத், கேரள பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பின்னர், பெங்களூருவில் உள்ள IIScஇல் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

இதுவரை தலைவராக இருந்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கே சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக சோம்நாத் பொறுப்பேற்கவுள்ளார்.

புதிய தலைவரான சோம்நாத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைத்தளத்தின் மூலம் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு - பெருந்தொற்று நிபுணர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.