ETV Bharat / bharat

ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மேலும் 4 விருதுகள் - படக்குழு கொண்டாட்டம்!

author img

By

Published : Feb 25, 2023, 1:04 PM IST

இயக்குநர் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வரும் நிலையில், மேலும் 4 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ஆர்ஆர்ஆர்
ஆர்ஆர்ஆர்

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு, சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதை பெற்ற இயக்குனர் ராஜமவுலி, "இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும் சண்டை காட்சிகளில் நடிகர்கள் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பாக நடித்ததாகவும், நிறைய மெனக்கிடல்களை மேற்கொண்டதாகவும் கூறினர்.

மேலும் படக்குழு மற்றும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். படத்தை உருவாக்க 320 நாட்கள் கடுமையாக உழைத்ததாகவும், பெரும்பாலான நாட்களை படத்தின் சண்டை காட்சிகளுக்கு செலவிட்டதாவும்" அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த அங்கீகாரம் தனக்கும், தனது படத்துக்கும் மட்டுமல்லமால், இந்தியத் திரையுலகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார். மேலும் மேல் நோக்கி செல்ல இந்த விருது ஊக்கமளிக்கும் என்று ராஜமவுலி கூறினார். தொடர்ந்து சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை நடிகர் ராம் சரணுடன் இணைந்து இயக்குனர் ராஜமவுலி பெற்றுக்கொண்டார்.

மார்ச் 13ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஹாலிவுட் கிரிடிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவில் 4 விருதுகளை வென்று இருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது விழாவின் ஒரு பிரிவில் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமித்ஷா மாநாட்டில் கலந்து கொண்ட 14 பேர் பலி - பேருந்து விபத்தில் பலியான பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.