ETV Bharat / bharat

I.N.D.I.A கூட்டணியில் சீட் ஒதுக்கீடு எப்போது? மும்பை கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 4:43 PM IST

india-alliance-meeting-in-mumbai-second-resolution-on-jointly-contest-forthcoming-lok-sabha-election-2024
I.N.D.I.A கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் என தீர்மானம் நிறைவேற்றம்

INDIA Alliance Resolution Passed: I.N.D.I.A கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடும் என இன்று மும்பையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மும்பை (மகாராஷ்டிரா): மத்திய பாஜக அரசிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கினர். இக்கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று (ஆகஸ்ட் 31) தொடங்கி இன்று (செப்.1) வரை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி செய்துள்ளது. இக்கூட்டணியின் முதலாவது கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், இதற்கான பொறுப்புகளை பிகார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மேற்கொண்டு நடத்தினர். தற்போது I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று (ஆக.31) மற்றும் இன்று (செப்.1) நடைபெற்று வருகிறது.

I.N.D.I.A கூட்டணியின் சார்பாக இன்று நடைபெற்று வரும் மும்பை கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு,13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா (உதவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா, சிபிஐ தலைவர் டி ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, PDP தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: One Nation, One Election: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு!

இந்நிலையில் I.N.D.I.A கூட்டணி அறிவித்த தீர்மானம் இரண்டின்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், I.N.D.I.A கூட்டணியின் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • मुंबई में INDIA गठबंधन की बैठक देश में लोकतंत्र और संविधान को बचाने की ओर एक मजबूत कदम है।

    हमने ठान लिया है कि एक खुशहाल भविष्य के लिए हम एकजुट होकर महंगाई, बेरोजगारी और नफरत के खिलाफ आवाज बुलंद करेंगे।

    जुड़ेगा भारत - जीतेगा INDIA 🇮🇳 pic.twitter.com/1N4J6H2nXR

    — Congress (@INCIndia) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், சீட் ஒதுக்கீடு தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் கொள்கையில் I.N.D.I.A கூட்டணி செயல்படும். சமூகப் பிரச்னைகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளில் இந்த கூட்டணி செயல்படும். விரைவில் நாடு முழுவதும் I.N.D.I.A கூட்டணி சார்பாக பேரணிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா இணையும், இந்தியா வெல்லும் போன்ற முழக்கங்கள் மற்றும் கோஷங்கள் நாட்டின் அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "புதுச்சேரி அரசு மக்களுக்கு எதிரான அரசு" - மாஜி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.