ETV Bharat / bharat

அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

author img

By

Published : Mar 11, 2022, 8:59 AM IST

NV Ramana
NV Ramana

நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்' ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதில் உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா, பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, இங்கு குழுமியிருக்கும் அனைவரிடமும் ஒருங்கிணைந்த, சமத்துவமான வளர்ச்சிக்கான பாதையில் நாம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒருவர் தனது கனவை, இலக்கை அடைவதற்கு பாலின வேறுபாடு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் என்ற வார்த்தை நாம் உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அனைத்து தளங்களிலும், அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இந்திய நீதித்துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும். தற்போதைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 19 விழுக்காடு, உயர் நீதிமன்றங்களில் 11.8 விழுக்காடு மட்டுமே உள்ளன. இதை மேம்படுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: இந்திய அரசியலின் போக்கை மாற்றி காட்டியவர் மோடி - ஜெபி நட்டா புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.