ETV Bharat / bharat

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஓர் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:24 AM IST

Etv Bharat
Etv Bharat

October 20 Rasipalan: ஐப்பசி 3, அக்டோபர் 20 வெள்ளிக்கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

மேஷம்: உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களும் உங்களை கவனித்துப் பார்த்தால், நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியடைந்து அனைவரையும் கவர்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: ஒரு மேலாளராக நீங்கள் நிறுவனத்திற்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்: எதிர் பாலினத்தவருடன் உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அரசுத் துறையில் இருப்பவர்கள் மேலதிகாரியிடமிருந்து ஊக்கமும், உதவியும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் எந்த விதமான பிரச்னையையும் எதிர்கொண்டு தீர்த்து விடுவார்கள்.

கடகம்: அலுவலகத்தில் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதே நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன், நேரத்தை செலவிடுவதற்காக பணியை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

சிம்மம்: உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன், பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை வகுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்கள், பலரது பாராட்டைப் பெறுவார்கள். பொதுவாக இன்று சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி: நீங்கள், இன்று குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால், உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்: உங்களது போட்டியாளர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் வெற்றியைத் தடுக்கவும், உங்களது புகழைக் குறைக்கவும் அவர்கள் விரும்புவதால், எச்சரிக்கையுடன் செயல்படவும். அவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு பதிலாக, அவர்களது பின்புலங்களை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்கள் வாழ்க்கையில் தோன்றும் புதிய காதல் உறவால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

விருச்சிகம்: உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்கும். புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படும். குறிப்பாக, உங்களது ஆளுமைப் பண்பை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

தனுசு: உங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு, உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம்போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்: பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். ஆனால், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும் உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைகூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், புதிய சொத்துக்கள் வாங்கக் கூடும். அதனால் அது தொடர்பான விபரங்களைச் சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்: ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாகச் செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.