ETV Bharat / bharat

ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம்.. காங்கிரசுக்கு கைகொடுக்குமா கர்நாடக பார்முலா?

author img

By

Published : Jun 1, 2023, 4:30 PM IST

Ashok Gehlot
Ashok Gehlot

நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அனைத்து குடும்பங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். குறைந்த அளவில் மின் உப்யோகிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார சுமைகளை இந்த திட்டம் குறைக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

பொது மக்களின் கருத்து மற்றும் பணிவீக்க விவகார நிவாரண முகாம்களின் பரிந்துரையை அடுத்து பொது மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். மேலும் மே மாதத்திற்கான மின் கட்டணத்தில் மாற்றம் குறித்து பொது மக்கள் தெரிவித்து உள்ள கருத்துகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் மூலம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார சுமை சற்று குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் 100 யூனிட் வரை மின் உபயோகப்படுத்துபவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்றும், 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்த்து மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அரசின் இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம் மாதந்தோறூம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெற்று நுகர்வர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடுத்தர வர்க்க மக்களை ஆதரிக்கும் வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அசோக் கெலாட் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இலவச மின்சார திட்டம் வொர்க் அவுட் ஆனது போல் ராஜஸ்தானில் எடுபடுமா என்ற சந்தேகத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

மாநிலத்தில் சமையல் எரிவாயு மானியம், விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு சுகாதார காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளை அறிமுகப்படுத்தியது.

அரசு மருத்துவமனைகளில் 25 லட்ச ரூபாய் வரை இலவச மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்தது. மேலும் சமூதாய பாதுகாப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக மாற்றி அறிவிக்கப்பட்டது. அதேநேரம் தேர்தல் வருவதால் அசோக் கெலாட் அரசு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவதாகவும், ஜூன் 1ஆம் தேதி முதல் 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்றும் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : காதலியுடனான உறவை மறுக்கும் காட்பாதர் நடிகர்... இது என்ன புது பிரச்சினை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.