ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

author img

By

Published : Dec 8, 2022, 5:23 PM IST

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராக்கும் சட்டசபை தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராக்கும் சட்டசபை தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராக்கும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.

டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடியும் நிலையில் உள்ளது. இதில் குஜராத்தில் பாஜக 149 இடங்களில் வெற்றி பெற்றும், இமாச்சலில் காங்கிரஸ் 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் பாஜகவும், இமாச்சலில் காங்கிரஸும் ஆட்சி அமைக்க உள்ளது.

அதேநேரம் குஜராத்தில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 2 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. இது ஒரு தேசிய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய பவன் கேரா, “ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ராக்கும் சட்டசபை தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். குஜராத் தேர்தலின் இறுதி முடிவு வரும் வரை காத்திருப்போம்.

நாங்கள் பாஜகவுக்கு எதிராக போராடுகிறோம். பாஜகவின் ஆட்சிக்கு எதிரான மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சட்டமன்றத் தேர்தலில் செயல்படும் சில முக்கியமான பிரச்னைகள்” என கூறினார். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "மவுன பிரசாரம்" - காங்கிரஸ் தோல்விக்கு காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.