ETV Bharat / bharat

புதுச்சேரியில் 1,471 பேருக்கு கரோனா

author img

By

Published : Jan 14, 2022, 2:19 PM IST

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 1,471 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Puducherry covid update  corona update  covid update  Puducherry corona count  புதுச்சேரியில் கரோனா நிலவரம்  கரோனா தொற்று  கரோனா பரவல்  கரோனா நிலவரம்  கரோனா பாதிப்புகள்
கரோனா

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1,335 நபர்களுக்கும்; காரைக்காலில் 97 பேருக்கும்; ஏனாமில் 14 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 1,471 நபர்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 5,658 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,884 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,27,795 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,35,337 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி முதல் தவணை 9,05,503 பேரும், இரண்டாம் தவணை 5,87,749 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 1,845 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 14,95,097 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Corona Update: இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.