ETV Bharat / bharat

கவுகாத்தி எய்மஸ் மருத்துவமனையைத் திறந்து வைத்த பிரதமர் - வடகிழக்கு மாநிலங்களில் முதல் எய்ம்ஸ்!

author img

By

Published : Apr 14, 2023, 3:14 PM IST

Modi
Modi

வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்தும் வகையில் அசாமில் கட்டப்பட்ட எய்மஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களில் கட்டமைக்கப்பட்ட முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி அசாம் தலைநகர் கவுகாத்திக்குச் சென்றார். ஆயிரத்து 123 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட முதல் எய்ம்ஸ் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த கால விழாவின் முதல் நாளான "ரொங்காலி பிகு" பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட மற்றும் முடிவு பெற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார், பிரதமர் மோடி.

முன்னதாக விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு, அசாம் ஆளுநர் குலாப் சந்த் கடாரியா, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நல்பரி, நாகோன், கொக்ராஜ்கர் பகுதிகளில் 3 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

கவுகாத்தியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அசாம் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு முழு வடகிழக்குப் பகுதிக்கும் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பொது மக்கள் தரமான சுகாதார சேவையை அணுக இந்த எய்ம்ஸ் மருத்துவமனை உதவும் என அவர் குறிப்பிட்டார். அசாம் மட்டுமின்றி முழு வடகிழக்கு பிராந்தியத்திற்கும் எய்ம்ஸ் மருத்துமனை ஓர் முக்கிய நிகழ்வாக அமையும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

  • বʼহাগ মাথোঁ এটি ঋতু নহয়
    নহয় বʼহাগ এটি মাহ
    অসমীয়া জাতিৰ ই আয়ুস ৰেখা
    গণ জীৱনৰ ই সাহ

    This immortal song by Dr Bhupen Hazarika, the Bard of Brahmaputra, echoes the sentiment of every Assamese people. I heartily welcome Hon'ble PM Shri @narendramodi Ji to Assam to celebrate Bihu. pic.twitter.com/WpVvFJ7ssS

    — Himanta Biswa Sarma (@himantabiswa) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டின் சாட்சியம் இது என்று கூறினார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 ஆயுஷ் படுக்கைகள் உள்பட 750 படுக்கைகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : India Corona : 50 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பரவல்! உச்சம் தொடும் கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.