ETV Bharat / bharat

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள்; நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை செலுத்திய தலைவர்கள்!

author img

By ANI

Published : Dec 6, 2023, 11:54 AM IST

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள்
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள்

Ambedkar Memorial day: சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை, "மஹாபரிநிர்வான் திவாஸ்"-ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் பங்கேற்று அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பிரதமர் மோடி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பியாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், சமூக நலனுக்காகப் போராடி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனது வாழ்கையையே அர்ப்பணம் செய்த அழிவில்லா போராளி. அவரது மஹாபரிநிர்வான் நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையான வணக்கங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

  • President Droupadi Murmu paid floral tributes to Babasaheb Dr B.R. Ambedkar on his Mahaparinirvan Diwas at Parliament House Lawns, New Delhi. pic.twitter.com/r3rO9xMUcn

    — President of India (@rashtrapatibhvn) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

  • “We are Indians, firstly and lastly”

    ~ Babasaheb Dr. B R Ambedkar

    Babasaheb was a lifelong champion of the democratic principles of liberty, equality, fraternity and justice.

    On his Mahaparinirvan Diwas, we pay our deepest respects to his ideas of social transformation and… pic.twitter.com/Qx9xtltFWK

    — Mallikarjun Kharge (@kharge) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரும்பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கர். குறிப்பாக இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடைபெறும் தீண்டாமை வன்கொடுமையைக் கண்டித்து சத்தியாகிரகம் நடத்தினார். மேலும் இவருக்கு 1990ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: புயலுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் சென்னை.. மீட்புப் பணிகள் தீவிரம் - தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.