ETV Bharat / bharat

பிரதமர் மோடி குஜராத் பயணம்... காதி விழாவில் பங்கேற்பு...

author img

By

Published : Aug 26, 2022, 1:28 PM IST

pm-to-visit-gujarat-on-27-28-august
pm-to-visit-gujarat-on-27-28-august

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 27 மற்றும் 28 தேதிகளில் குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 27ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் காதி விழாவில் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 28ஆம் தேதி புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கிவைக்கிறார். அதன்பின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

காதி விழா: சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி, காதி விழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் காதியின் முக்கியத்துவத்தை எப்படி இருந்தது என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் அதிகமான பெண் காதி கைவினை கலைஞர்கள், பங்கேற்று ராட்டையில் நூல் நூற்க உள்ளனர்.

ஸ்மிருதி வன நினைவிடம்: அதன்பின் புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார். இந்த நினைவிடத்தில் 2021ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் வளாகத்தில் ஸ்மிருதி வன நிலநடுக்க அருங்காட்சியகம் 7 கருப்பொருட்களின் அடிப்படையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக புஜ் பகுதியில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பார். குறிப்பாக புஜ்-பீமாசார் சாலை உட்பட ரூ.1,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.