ETV Bharat / bharat

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

author img

By

Published : Jan 3, 2023, 6:43 AM IST

Updated : Jan 3, 2023, 3:24 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் 108ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கிறார்
இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 108ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 3) தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. மகளிருக்கு அதிகாரம் அளித்தலுடன் நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்திய அறிவியல் மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக நடைபெறவுள்ளன.

மகாராஷ்டிரா ஆளுநரும், மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஆலோசனை குழுவின் தலைவருமான நிதின் கட்கரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுபாஷ் ஆர் சௌத்ரி, கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மாநாடு சங்கத் தலைவர் விஜய் லஷ்மி சக்சேனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மகளிர் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு, குழந்தைகள் அறிவியல் மாநாடு, பழங்குடியினர் சந்திப்பு, அறிவியல் மற்றும் சமூக அமர்வு, அறிவியல் தொடர்பாளர்கள் மாநாடு ஆகியவையும் நடைபெறவுள்ளன. நோபல் பரிசு பெற்றவர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னணி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி, ராணுவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

தொழில்நுட்ப அமர்வு மூலம் வேளாண் மற்றும் வன அறிவியல், விலங்குகள், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புத்துறை அறிவியல், மானுடவியல் அறிவியல், பொறியியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சாதன அறிவியல், கணித அறிவியல், மருத்துவ அறிவியல், புதிய உயிரியல் உள்ளிட்டவற்றின் வாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: தமிழர்கள் காட்டும் அன்பை வேறு யாரிடமும் கண்டதில்லை - ராகுல்காந்தி

Last Updated : Jan 3, 2023, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.