ETV Bharat / bharat

7 கோடி ஃபாலோயர்ஸ்: மாஸ் காட்டும் மோடி

author img

By

Published : Jul 29, 2021, 5:42 PM IST

பிரதமர் மோடியின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்த நிலையில், #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

PM Modi
மோடி

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் ஒரு ட்வீட் பதிவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் பார்வையிடுவர். அவரைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது.

கடந்தாண்டு 60 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கிற்கு, ஒரே ஆண்டில் கூடுதலாக 10 லட்சம் ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். உலக அளவில் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11ஆவது இடத்தில் உள்ளார்.

PM Modi
ட்விட்டரில் மாஸ் காட்டும் மோடி

பிரதமர் மோடியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஏழு கோடியை கடந்த நிலையில், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும்விதமாக #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

முன்னாள் அதிபர் ஒபாமா அதிகபட்சமாக 129.8 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்வித்துறையில் புதிய திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.