இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் - பிரதமர் மோடி

author img

By

Published : Oct 31, 2022, 7:08 AM IST

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ()

குஜராத் மாநிலத்தில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பல நாடுகளில் பிரபலமான போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் கார்களை இந்தியா தயாரித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக். 30) அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்று நாம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். பல நாடுகளில் பிரபலமான போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் கார்களை இந்தியா தயாரித்து வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. தற்போது இந்தியா உலக அளவில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதில் மிகப்பெரிய நாடாக மாறி வருகிறது. இந்த உற்பத்தி மையம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் போக்குவரத்து விமானங்கள், ஆயுதப்படைகளுக்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, "கலாச்சார மற்றும் கல்வி மையமாகப் புகழ்பெற்ற வதோதரா, விமானத் துறை மையமாக புதிய அடையாளத்தை உருவாக்கும். விமானப் போக்குவரத்து துறையில் உலகின் முதல் மூன்று நாடுகளில் நாம் நுழைய உள்ளோம்.

பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை எடுத்துரைத்த பிரதமர், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். கடந்த 8 ஆண்டுகளில், 160-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் அல்லாமல், பொருளாதாரத்தின் 61 துறைகளில் பரவி, இந்தியாவின் 31 மாநிலங்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.

குறிப்பாக, விண்வெளித் துறையில் மட்டும் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் தற்சார்பின் முக்கியமான தூண்களாக இருக்கப் போகின்றன . 2025 ஆம் ஆண்டிற்குள் நமது பாதுகாப்பு உற்பத்தியை 25 பில்லியன் டாலருக்கு அப்பால் உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். நமது பாதுகாப்பு ஏற்றுமதியும் 5 பில்லியன் டாலர்களை தாண்டும். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடங்கள் இந்தத் துறையை மேம்படுத்த பெரிதும் உதவும்.

இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குஜராத் அரசுக்கு பாராட்டுகள் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் ஏர்பஸ் தலைமை வர்த்தக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இளைஞர்கள் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளியுங்கள் - ரோஸ்கர் மேளாவில் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.