ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஒரு ஐபிஎல்.. உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் ஏலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 9:55 AM IST

Puducherry IPL Auction: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ஏலம் எடுப்பது போல், புதுச்சேரி அருகே உள்ள பாகூர் கிராமத்தில் நடைபெறும் பிபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

players-auction-for-local-cricket-tournament-in-puducherry
ஐ.பி.எல். பாணியில் நடைபெற்ற ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி

ஐ.பி.எல். பாணியில் நடைபெற்ற ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: இந்தியாவில், கிரிக்கெட் என்பது பிரிக்க முடியாத ஒன்றாகும். மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு கிரிக்கெட் விளையாடும் வீரர்களும், அதற்கான ரசிகர்களும் அதிகம். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதே போல் திறமையான வீரர்களை வெளிக்கொணரும் விதமாக நடைபெறும் ராஞ்சி டிராபி, விஜய் ஹாசரே கோப்பை, தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற போட்டிகள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகாமாகும்.

பாகூர் பிரீமியர் லீக்: அந்த வகையில், புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக பாகூர் பிரீமியர் லீக் (BPL) என்ற கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக நடைபெற உள்ளது.

பிரமாண்டமாக துவங்க உள்ள இந்த லீக் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுக்கும் முறை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. எட்டு அணிகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த அணிகளுக்கு உரிமையாளர்களாக பாகூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள், அணியின் உரிமையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஐபிஎல் போட்டியில் ஏலம் கேட்பது போல், எட்டு அணி உரிமையாளரும் வட்டமேசை அமைத்து, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயர் சொல்ல சொல்ல, அவர்கள் பெயரை போர்டில் எழுதி வைத்து, அந்தந்த அணிகள் ஏலம் எடுத்தனர்.

வீரர்கள் ஏலம்: சுமார் 4 லட்சம் வரை வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ரூ.10,000, ரூ.15,000, ரூ.8000, ரூ.6000 என்று கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிகபட்சமாக ஏலமாக எடுக்கப்பட்டனர். இதற்கான போட்டி வருகிற ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை, மொத்தம் எட்டு நாட்கள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டார்.

இது குறித்து விழாக்குழுவினர் கூறியதாவது, “இம்முயற்சி கிராமப் பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களையும் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்க வைப்பது இதற்கான ஒரு சிறிய முயற்சியாக கிராமப்புற விளையாட்டு வீரர்களின் நலனுக்காக (BPL) இந்த போட்டி துவங்கப்பட்டுள்ளது” என்றனர். புதுச்சேரியில் முதல் முறையாக உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.