புதுச்சேரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி!

புதுச்சேரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி!
புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருமணிநேரம் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி இரு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை தவறானது என கூறி மருத்துவர்கள் அப்போதே போராட்டம் நடத்தினர்.
90 நாட்கள் ஆகியும் அவர்களது பணியிடை நீக்கம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு அவர்களது சம்பளமும் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடியை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் காரைக்காலுக்கு மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் இந்த வாயிற்கூட்டம் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடந்தது. ஒரு மணிநேரம் மருத்துவர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து வாயிற்கூட்டம் நடத்தியதால் வாரத்தின் முதல் நாளாக இன்று அதிகளவில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரியில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருமணிநேரம் பணியை புறக்கணித்து வாயில் கூட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
இதையும் படிங்க: சமையல் கற்றுக்கொள்ள சொன்ன தாய் - மனமுடைந்த இளம்பெண் தற்கொலை
