ETV Bharat / bharat

தவாங் எல்லை விவகாரம்: நாடளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

author img

By

Published : Dec 21, 2022, 12:29 PM IST

தவாங் எல்லை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Etv Bharat
Etv Bharat

டெல்லி: அருணாச்சலப் பிரதேசம் தவாங் மாவட்ட எல்லையில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் கடந்த 9-ம் தேதி இந்தியா - சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்ததாகவும் பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்து பேசியதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாகரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகின்றன.

  • Delhi | Congress MP Sonia Gandhi and other Opposition leaders protest in front of the Gandhi statue inside the Parliament premises, demanding a discussion on the India-China faceoff at Tawang pic.twitter.com/yHzTizsEJS

    — ANI (@ANI) December 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில், சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழர்களிடம் நூதன முறையில் ரூ.2.67 கோடி அபேஸ்.. டெல்லியில் ரயில்களை எண்ணிய அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.