ETV Bharat / bharat

கர்நாடகாவில் பயங்கரவாத சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 3:33 PM IST

Etv Bharat
Etv Bharat

One more terror suspect arrested in Karnataka: கர்நாடகாவில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், மேலும் ஒருவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு (கர்நாடகா): கடந்த 2017ஆம் ஆண்டு முகம்மது அர்ஷத் கான் என்ற நபர் சிறாராக இருந்தபோது, நூர் அகமது கடத்தல் மற்றும் கொலை வழக்கு உடன் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டார். இது தவிர கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும் அர்ஷத் கான் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்குகள் தொடர்பாக அர்ஷத் கானை பல முறை காவல் துறையினர் கைது செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்து உள்ளார். ஆனால், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 27) இந்த திட்டம் அர்ஷத் கானுக்கு பலன் அளிக்கவில்லை. ஏனென்றால், அன்று காலை 5 மணியளவில் அர்ஷத் கான் கர்நாடகாவின் ஆர்டி நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் உறுதி செய்து உள்ளனர்.

பின்னர், அர்ஷத் கான் தங்கி இருந்த வீட்டின் கதவை உடைத்த காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று உள்ளனர். அப்போது, அர்ஷத் கான் மீண்டும் கத்தியை வைத்து தனது கழுத்தை அறுத்துக் கொள்வதாக மிரட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், வீட்டின் இரண்டாவது தளத்தில் இருந்து குதிக்கவும் அவர் முயற்சி செய்து உள்ளார். இருப்பினும், காவல் துறையினர் அவரது தற்கொலை முயற்சிக்கு அனுமதி மறுத்து, அவரை கைது செய்து உள்ளனர்.

முன்னதாக, பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் சில நாட்களுக்கு முன்பு ஐந்து பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து இருந்தனர். அதிலும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான ஜூனைத் என்பவரிடம் இருந்து அர்ஷத் கானுக்கு பல முறை தொடர்பு கொண்டு உள்ளார் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Imran Khan : இம்ரான் கான் விடுதலை... முறைகேடு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.