ETV Bharat / bharat

பிப்.14 இனி காதலர் தினம் இல்லையாம் 'COW HUG DAY' வாம்!

author img

By

Published : Feb 9, 2023, 12:31 PM IST

இனி பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் இல்லை… 'COW HUG DAY'
இனி பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் இல்லை… 'COW HUG DAY'

பொதுமக்களுக்குள் நேர்மறையான எண்ணங்கள் உருவாகவும், மகிழ்ச்சியான உணர்வை ஏற்படவும் பிப்ரவரி 14ஆம் தேதியை (COW HUG DAY)மாடு கட்டித் தழுவும் தினமாக கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி: ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பரிசுகளோடு தங்கள் அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். இந்நிலையில், மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசுக்களின் முக்கியத்துவத்தை போற்றவும், வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகவும் பசுக்களை விரும்புபவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடுகளை கட்டித் தழுவும் தினமாக மாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், மாடுகளை கட்டித் தழுவுவதன் மூலம் பொதுமக்களுக்குள் உணர்ச்சி வளத்தை மிகுதிப்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்றும் மேற்கத்திய கலாச்சாரம் வளர்ந்து வருவதால் வேத கலாச்சாரங்கள் அழிவுக் கட்டத்தை நோக்கி செல்வதை தடுக்க முடியும் பாரம்பரியம் காக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சமூக வலைதலங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் இது ஒரு பொய்யான செய்தி என நினைத்தேன் ஆனால், இந்த அறிக்கையை படித்த பிறகு தான் நாம் உண்மையிலேயே ‘மாடுகள் கட்டித் தழுவும் தினம்’ கொண்டாட வேண்டும் என தெரிந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: layoffs: டிஸ்னியில் 7,000, ஜூமில் 1,300 ஊழியர்கள் பணிநீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.