ETV Bharat / bharat

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

author img

By

Published : Sep 16, 2022, 8:08 PM IST

டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Nigerian woman tests positive for monkeypox in Delhi, India's tally rises to 13
Nigerian woman tests positive for monkeypox in Delhi, India's tally rises to 13

டெல்லியில் 30 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். டெல்லியில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்என்ஜேபி மருத்துவமனை தரப்பில், இந்த எட்டு பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் அடங்குவர். இவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் புண்கள், நிணநீர் அழற்சி, தலைவலி, தசைவலி, சோர்வு, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளன. முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 3 நோயாளிகள் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜூலை 24ஆம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.