ராஜஸ்தானுக்கு ரூ.மூவாயிரம் கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

author img

By

Published : Sep 16, 2022, 10:10 PM IST

ராஜஸ்தானுக்கு  அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட மற்றும் திரவக்கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வகிக்க தவறியதாக ராஜஸ்தான் மாநிலத்தின் மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) 3,000 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு அளிக்க உத்தரவு அளித்துள்ளது.

ராஜஸ்தான்: தேசிய பசுமை தீர்ப்பாய அமைப்பு கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறியதற்காக ராஜஸ்தான் அரசுக்கு 3,000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகளை அமல்படுத்துவதை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்ய NGT(தேசிய பசுமை தீர்ப்பாயம்) சட்டத்தின் பிரிவு 15இன் கீழ் இந்த இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கூறுகையில், ‘மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டு அமைப்புகளை அமைத்தல், தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளின் அமைப்புகள்/செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் முறையான மல கழிவுநீர் மற்றும் கசடு மேலாண்மை வசதிகளை அமைத்தல் ஆகியவை அடங்கும்’ எனத் தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, செயல்படுத்தும் திட்டத்தில் தேவையான கழிவு செயலாக்க ஆலைகளை அமைத்தல் மற்றும் விடுபட்ட 161 தளங்களை சரிசெய்தல் ஆகியவை அடங்கும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி, பயோமைனிங் மற்றும் கம்போஸ்ட் ஆலைகளில் இருந்து வெளிவரும் கரிமக்கழிவுகளுக்கு உயிர்-சுரங்கச்செயல்முறை செயல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கான விதிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் இருந்ததற்காக ராஜஸ்தான் அரசு மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக செப்டம்பர் 2, 2014 தேதியில் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் திரவக்கழிவுகள் தொடர்பாக பிப்ரவரி 22, 2017 தேதியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான சிக்கல்கள் தீர்ப்பாயத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:"அம்பேத்கரும் மோடியும்" நூல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.