ETV Bharat / bharat

பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை? அடுத்த 5 நாட்கள் நடக்கப் போவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:53 AM IST

Women's Reservation Bill: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.

விடை பெற்றது பழைய நாடாளுமன்றம்
விடை பெற்றது பழைய நாடாளுமன்றம்

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்ட பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ள நிலையில் நடப்பு சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (செப். 18) பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் நடைபெற்ற நிலையில் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மீதமுள்ள 4 நாள் அமர்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி பழைய நாடாளுமன்ற வளாத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மீதமுள்ள நான்கு நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (செப். 18) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதுது. முன்னதாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் விரைவில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 1999 ஆண்டு முதல் பேசப்பட்டு வந்தது. பின்னர், கடந்த 2010 ஆண்டு மார்ச் மாதம் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் மக்களவையில் அது நிறைவேற்றப்படவில்லை. இம்மசோதாவிற்கு சில கட்சிகள் ஆதரவு அளித்தாலும் பல அரசியல் கட்சிகள் வெளிப்படையகவே எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த மசோதா நடப்பு சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பழைய நாடாளுமன்றத்தில் உறையாற்றிய பிரதமர் மோடி, "பழைய நாடாளுமன்றத்தில் இருந்து இன்றுடன் விடைபெறுகிறோம். பழைய நாடாளுமன்றம் இனி அடையாளமாக விளங்குவதுடன் பல தலைமுறைகளுக்கு இது ஊக்கமளிக்கும்.

ஆங்கிலயோர் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தீர்மானம் எடுத்தாலும், நமது நாட்டு மக்களின் உழைப்பும், வியர்வையாலும் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். பழைய நாடாளுமன்றத்தில் இதுவரை 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: Women's Reservation : மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.