ETV Bharat / bharat

15 லிட்டர் பால் தரும் எருமை.. இது என்ன ரகம்? விலை எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 7:44 PM IST

Etv Bharat
Etv Bharat

ஹரியானாவில் உள்ள எருமை நாள் ஒன்றுக்கு சுமார் 15 லிட்டர் பால் கொடுக்கிறதாம். அது மட்டும் இன்றி எருமைகளுக்கான அழகிப்போட்டியில் பங்கேற்று பரிசுகளையும் அள்ளிக் குவித்துள்ளதாம்.

ஹரியானா: அழகிலும், பால் உற்பத்தியிலும் பெயர் பெற்றது முர்ரா வகையைச் சேர்ந்த எருமை என கூறப்படுகிறது. இந்த இனத்தை சேர்ந்த ஹரியானாவில் உள்ள எருமை, நாள் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 15 லிட்டர் பால் கொடுப்பதுடன் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வாரிக் குவித்துள்ளது. அங்குள்ள பிவானி மாவட்டத்தில் உள்ள இந்த முர்ரா வகையைச் சேர்ந்த எருமை, அந்த மாநிலம் முழுவதும் தனக்கென ஏராளமான ரசிகர்களைக் கொண்டு பிரபலமாகி இருக்கிறது.

தர்மா என அதன் உரிமையாளரால் பெயர் சூட்டப்பட்டு அன்போடு வளர்க்கப்படும் தர்மாவுக்கு தற்போது 3 வயதாகும் நிலையில் அவளுக்கும் ஒரு குழந்தையாகக் குட்டி கன்று ஒன்று பிறந்திருக்கிறது. இந்த தர்மாவை அதன் உரிமையாளர் சஞ்சய் சிறு வயதில் இருந்தே வளர்த்து வரும் நிலையில், நாள்தோறும் அதற்குப் பச்சை புல், பருத்திக் கொட்டை உள்ளிட்ட பல கொட்டை வகைகள் மற்றும் சுமார் 40 கிலோ வரை பச்சை கேரட் உள்ளிட்ட பலவற்றை உணவாகக் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த தர்மா தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 15 லிட்டர் பால் கரக்கும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற எருமை அழகிப் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தன் சொந்த ஊரில் மட்டும் பிரபலமான தர்மா, தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறாள். இந்நிலையில் இந்த தர்மாவை சுமார் ரூ.61 லட்சம் கிடைத்தால் விற்றுவிடத் தயாராக உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

எருமை என்றாலே சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 முதல் 5 லிட்டர் வரை மட்டுமே பால் கரக்கும். ஆனால் இந்த பாலில் புரதச் சத்து சுமார் 40 சதவீதம் இருப்பதால் பசுவின் பால் விலையை விட எருமைப் பாலிற்கான விலை இரட்டிப்பாக இருக்கும். அதேபோல, பசு மாட்டைப் பராமரிப்பது போன்று எருமை மாட்டைப் பார்த்து, பார்த்துக் கவனிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், தண்ணீர் மற்றும் குளிர்ச்சியான பகுதியில் இருப்பதை மட்டும் எருமைகள் விரும்பும் நிலையில் அதற்கேற்ற காலநிலையும் வேண்டும் என்பது அவசியம்.

அந்த வகையில் ஹரியானாவைப் பொருத்தவரை அங்கு முர்ரா எருமைகள் வளர்வதற்கு ஏற்ற காலநிலை உள்ளதால் ஏராளமான விவசாயிகள் இந்த எருமையை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தர்மா எருமையும் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளது.. ஆனால் காலப்போக்கில் கருமை நிறத்தில் நல்ல கொழு கொழுவெனக் குட்டி யானைபோல் அழகாக இருந்த தர்மா.. பால் கரப்பதிலும் கெட்டிக்காரியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த் - மன்னிப்பு கோரிய கன்னட நடிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.