ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

author img

By ANI

Published : Dec 5, 2023, 11:47 AM IST

நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது!
நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது!

Parliament Winter Session : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 5 மாநில தேர்தலின் காரணமாக நேற்று (டிச.04) தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை 19 நாட்கள், இந்த ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (டிச.05) நாட்டில் நிலவும் பொருளாதார நிலை குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய், சுஷில் குமார் மோடி, ஆதித்ய பிரசாத் மற்றும் ஷம்பு சரண் படேல் ஆகியோர் மாநிலங்களவையில் 'நாட்டின் பொருளாதார நிலை' குறித்த விவாதத்தைத் தொடங்க உள்ளனர். மேலும், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று குறிப்பாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் சாதனை, உத்தரகாண்ட் சுரங்க விபத்து என பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. மேலும், மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தாவின் இடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய குடியுரிமை பாதுகாப்பு மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்; மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கத் தயார் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.