உணவு வாங்க பணம் கேட்ட ஆறு வயது சிறுவனை அடித்து கொன்ற காவலர்

உணவு வாங்க பணம் கேட்ட ஆறு வயது சிறுவனை அடித்து கொன்ற காவலர்
மத்திய பிரதேச மாநிலத்தில் உணவு வாங்க பணம் கேட்ட ஆறு வயது சிறுவனை காவலர் ஒருவர் அடித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நேற்று நடந்த ரத யாத்திரையின் போது உணவு வாங்க பணம் கேட்டதற்காக ஆறு வயது சிறுவன் காவலர் ஒருவரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டான்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் கூறுகையில், “ ரத யாத்திரையின் போது பணியில் இருந்த காவலர் ரவி ஷர்மாவிடம் உணவு வாங்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தும் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவலர், அந்த சிறுவனை கொன்று உடலை காரில் எடுத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியுள்ளார்.
இதுகுறித்து தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், சிறுவன் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டதால் கோபமடைந்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி
