ETV Bharat / bharat

இந்தியை கற்றுத்தராத ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும் - மாஜிஸ்திரேட்

author img

By

Published : Nov 3, 2022, 5:04 PM IST

District Magistrate
District Magistrate

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்ற தாடியா மாவட்ட மாஜிஸ்திரேட் ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

போபால்: மத்திய பிரதேச மாநிலம் தாடியா மாவட்டம் ஆனந்த்பூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அந்த மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் இன்று (நவம்பர் 3) ஆய்வு நடத்தினர். இதனிடையே 6ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரை கூப்பிட்டு அவர்களிடம் புத்தகத்தை கொடுத்து படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது ஒரு மாணவர் இந்தியை சரியாகப் படிக்காமல் திணறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார், பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட அனைத்து ஆசிரயர்களையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர், இந்த பள்ளியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் சராசரியாக ரூ.50,000 என்று மொத்தமாக ரூ.4.5 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இதில் தலைமையாசிரியர் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

இப்படி இருக்கையில், நீங்கள் இந்தியை கூட மாணவர்களுக்கு சரியாக கற்றுக்கொடுக்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும். நீங்கள் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறீர்கள் என்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.