ETV Bharat / bharat

லக்னோவில் எம்பிபிஎஸ் மாணவி தற்கொலை

author img

By

Published : Feb 17, 2023, 6:42 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எம்பிபிஎஸ் மாணவி தற்கொலையால் உயிரிழந்தார்.

MBBS student dies under mysterious circumstances by jumping from 9th floor in Lucknow
MBBS student dies under mysterious circumstances by jumping from 9th floor in Lucknow

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள டி.எஸ்.மிஸ்ரா மருத்துவக் கல்லூரி மாணவி இன்று (பிப். 17) தற்கொலையால் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் காலை 8 மணி அளவில், மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் நடந்துள்ளது.

இதைக்கண்ட சக மாணவிகள் போலீசாருக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லக்னோ போலீசார் கூறுகையில், தற்கொலையால் உயிரிழந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.

இவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த மெதல் சிங் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தந்தை கைலாஷ் ஆசிரியராக உள்ளார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கைலாஷ் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், விடுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். விடுதி காப்பாளர், மேற்பார்வையாளர், மாணவிகள், வாட்ச் மேன் உள்பட அனைவரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளோம். இவருடன் நெருக்கமாக இருந்த மாணவிகளிடம் முதல்கட்டமாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஐஐடி, எம்பிபிஎஸ் மாணவர்கள் தற்கொலையால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அண்மையில் சென்னை ஐஐடி மாணவர் தற்கொலையால் உயிரிழந்ததும், மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் மோகம்.. தாய் கழுத்தை நெரித்து கொலை.. போலீசாரிடம் தற்கொலையென புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.