ETV Bharat / bharat

டெல்லி விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு - அதிகாரிகளின் விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:05 PM IST

Major accident averted at Delhi airport: டெல்லி விமான நிலையத்தில் ஒரு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், மற்றொரு விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்ததை அடுத்த பதட்டமான நிமிடங்கள் குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: டெல்லியில் இருந்து பாக்டோக்ராவுக்கு யுகே 725 (UK725) விமானம் டெல்லி விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஓடுபாதையில் புறப்படத் தயாராக இருந்தது. அதேநேரம், அதே ஓடுபாதையில் அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமானம் தரையிறங்கிக் கொண்டு இருந்தது. அதிலும், டெல்லிக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையின் முடிவை நோக்கி சென்று கொண்டு இருந்து உள்ளது.

அதிலும், இரண்டு விமானத்திற்கும் ஒரே நேரத்தில் புறப்பட மற்றும் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனை உணர்ந்த அப்போது பணியில் இருந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, உடனடியாக புறப்படுவதை நிறுத்துமாறு விஸ்தாரா விமானத்திற்கு அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து, டெல்லி - பாக்டோக்ரா விமானம், ஓடுபாதையில் இருந்து புறப்படுவதை நிறுத்திவிட்டு, உடனடியாக நிறுத்தும் இடத்திற்கு வந்து உள்ளது.

ஆனால், தேவையான எரிபொருளை நிறப்பப்பட்டதை உறுதி செய்வதற்காக விமானம் மீண்டும் நிறுத்தும் இடத்திற்கு வந்ததாக அதிகாரிகளும், பாக்டோக்ராவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பப்பட்டதாக பைலட்டும் அறிவித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, விமானத்தின் பிரேக்கிங் அமைப்புகளும் சரிபார்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம், சரியான நேரத்தில் விமானத்தின் புறப்பாடு நிறுத்தப்படவில்லை என்றால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் அடிப்படையில், ஒரு விமானத்தின் புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தின்போது எந்தவொரு விமானம் அல்லது வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இது தொடர்பான அறிவிப்பின்போது, டெல்லி - பாக்டோக்ரா விமானப் பயணிகள் அச்சம் அடைந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது தொடர்பாக மூத்த பைலட்டும், பாதுகாப்பு விவகாரங்கள் பவுண்டேஷனின் நிறுவனருமான கேப்டன் அமித் சிங் கூறுகையில், “விமான ஓடுபாதையின் அருகில் ஏற்பட உள்ள சாத்தியமான போக்குவரத்து மோதலை தவிர்க்க நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் உதவி உடன் தீவிரமாக கண்காணிப்பது அவசியமாகிறது. பொதுவாக ஒரு ஓடுபாதையில் விமானம் தரையிறங்காத வரை, மற்றொரு ஓடுபாதையில் மற்றொரு விமானம் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

ஒரு ஓடுபாதையில் விமானம் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தால், இரண்டாவது நடைபாதையில் விமானத்தின் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிப்பதை தவிர்க்க வேண்டும். அதேநேரம், சீரமைக்கப்பட்ட நெருக்கமான இடைவெளியில் இரண்டு விமானங்கள் சென்றால், விமானப் பாதையில் மோதல் ஏற்படலாம்” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: சென்னை - ஃப்ராங்ஃபர்ட் இடையே தினசரி விமான சேவை... பயணிகள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.