ETV Bharat / bharat

கங்கை நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை - நாட்டில் முதல் முறையாக கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்!

author img

By

Published : Apr 13, 2023, 9:14 AM IST

கொல்கத்தா - ஹவுரா இடையிலான நாட்டின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Metro rail
Metro rail

கொல்கத்தா : நாட்டில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சோதனை கொல்கத்தா கங்கை நதியில் நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நகரில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. நாட்டில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வந்த நகரம் என கொல்கத்தாவுக்கு என தனிச் சிறப்பு உண்டு.

நேதாஜி சுபாஷ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பவானிபூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரு பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் எஸ்பிளனேட் ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தின் போது மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டும் ரயிலில் இருந்தனர்.

அடுத்த ஏழு மாதங்களுக்கு ஹவுரா இடையிலான சோதனை மெட்ரோ ரயில் ஓட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தற்போது நடைபெற்றது சோதனை ஓட்டத்தின் ஒரு அங்கம் இல்லை என்றும் விரையில் புதிய வழித் தடங்களில் சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் சோதனை ஓட்டம் முயற்சி வெற்றி கண்டு உள்ளதாகவும் கொல்கத்தா மக்களுக்கு இந்த ரயில் சேவை இந்திய ரயில்வே வழங்கும் சிறப்பு பரிசு என்று மெட்ரோ ரயில்வே நிர்வாக பொது மேலாளர் தெரிவித்தார்.

சீல்டா நிலையத்தில் இருந்து எஸ்பிளனேடு நிலையத்திற்கு இரு ரயில் பெட்டிகளை எடுத்துச் செல்ல மெதுவான பேட்டரியில் இயங்கும் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது என்றும் அதேநேரம் வழித் தடத்தில் சரிவு இருந்தால் இந்த வகை இன்ஜின் பயன்படுத்த முடியாது என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழி பாதையில் சரிவு இருக்கும் நிலையில் ரயில் வேகமாக செல்லும் போது சக்கரம் வழுக்கி விழும் அபாயம் உள்ளதாகவும் சோதனை ஓட்டத்தில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் இன்ஜின் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்பிளனேடு நிலையத்தில் இருந்து ஹவுரா மைதானத்திற்கு பயணிகள் சேவை தொடங்கப்பட்டதும், கொல்கத்தா - ஹவுரா ஆகிய மாவட்டங்களை இந்த மெட்ரோ ரயில் சேவை இணைக்கும் என அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி ஜாமீன் ரத்தா? நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.