ETV Bharat / bharat

சாலை வசதியற்ற கிராமம் - மூதாட்டியை 5 கி.மீ. தோளில் சுமந்த மக்கள்!

author img

By

Published : Jun 13, 2021, 11:38 AM IST

கர்நாடகா: முச்சள்ளி பகுதியில் உடல்நிலை சரியில்லாத பெண்ணை அக்கிராம மக்கள் 5 கிலோ மீட்டர் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்

கர்நாடக மாநிலம் முச்சள்ளி பகுதியில் அடிப்படை சாலை வசதி இல்லாத காரணத்தினால் அக்கிராமவாசிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பலமுறை அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என அரசு அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் பயன் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவரை காரில் ஊருக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதால், அப்பகுதி மக்கள் தாங்களாகவே தோளில் அப்பெண்ணைச் சுமந்து சென்றனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்

அப்பெண்ணை ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்து, மரத்தின் தண்டு ஒன்றில் கட்டினர். பின்னர் அவர்கள், அவரை தோள்களில் சுமந்தபடியே காட்டு வழியாக 5 கிலோமீட்டர் ஊருக்குள் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.