ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வான கர்நாடக சிற்பி செதுக்கிய ராமர் சிலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 5:36 PM IST

Karnataka sculptor Yogiraj Arun Rama Idol Selected for Consecration in Ayodhya Ram Temple
அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வான கர்நாடக சிற்பி செதுக்கிய ராமர் சிலை

Ayodhya Ram Temple: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வைப்பதற்கு கர்நாடக சிற்பி செதுக்கிய ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி எனக் குறிப்பிடப்படும் இடம், ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த ராமர் கோயில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில், வருகிற ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என பல தரப்பினருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஜனவரி 16ஆம் தேதி ஹோமங்கள் துவங்கப்பட உள்ளன.

இந்த ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமரின் சிலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, 3 புகழ்பெற்ற சிற்பிகளிடம் சிலையினை செதுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அயோத்தியில் 6 மாதங்களாக முகாமிட்டிருந்த 3 சிற்பிகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்தில் இருந்து குழந்தை ராமரின் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • "ಎಲ್ಲಿ ರಾಮನೋ ಅಲ್ಲಿ ಹನುಮನು"

    ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಶ್ರೀರಾಮನ ಪ್ರಾಣ ಪ್ರತಿಷ್ಠಾಪನಾ ಕಾರ್ಯಕ್ಕೆ ವಿಗ್ರಹ ಆಯ್ಕೆ ಅಂತಿಮಗೊಂಡಿದೆ. ನಮ್ಮ ನಾಡಿನ ಹೆಸರಾಂತ ಶಿಲ್ಪಿ ನಮ್ಮ ಹೆಮ್ಮೆಯ ಶ್ರೀ @yogiraj_arun ಅವರು ಕೆತ್ತಿರುವ ಶ್ರೀರಾಮನ ವಿಗ್ರಹ ಪುಣ್ಯಭೂಮಿ ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಪ್ರತಿಷ್ಠಾಪನೆಗೊಳ್ಳಲಿದೆ. ರಾಮ ಹನುಮರ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧಕ್ಕೆ ಇದು… pic.twitter.com/VQdxAbQw3Q

    — Pralhad Joshi (@JoshiPralhad) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள ராமர் சிலை குறித்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அவரது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ராமன் எங்கோ அனுமனும் அங்கே. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமரின் சிலை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

பெருமைக்குரிய சிற்பி யோகிராஜ் அருண் வடித்த ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்படும். ராம அனுமனின் பிரிக்க முடியாத உறவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறப்பான சேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி யோகிராஜ் அருண் செதுக்கிய குழந்தை ராமர் சிலை அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய தேர்வாகி இருப்பது குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிற்பி யோகிராஜ் அருணின் தாயார் சரஸ்வதி அவரது மகிழ்ச்சியினை ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த பெருமைமிகு தருணம் குறித்து பேசிய அவர், “அருணின் தாத்தாவும், தந்தையும் இந்த தொழிலேயே இருந்ததால் ,அருணும் இந்த தொழிலையே தேர்ந்தெடுத்தார். அருணின் பள்ளி பருவத்தின்போது அவனது கையில் சாக்பீஸ் கிடைத்தாலே ஓவியங்களை வரையத் துவங்கி விடுவான். கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்ததால் அருணின் ரத்தத்திலேயே கலை ஊறி போய் இருந்தது.

எனது மகனின் பணி மகிழ்ச்சியும் பெருமையும் அளித்துள்ளது. உலகமே இதனை கவனித்து வருகிறது. எங்கள் முன்னோர்களின் ஆசியும், எங்கள் பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும் இந்த பணி எங்களுக்குக் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

அருணின் மனைவி விஜேதா கூறுகையில், “அருண் கடந்த ஜூன் மாதம் அயோத்தி சென்றிருந்தார். அதனால் கடந்த 1 ஆண்டாக வேறு வேலை எதுவும் எடுக்காமல் இருந்தோம். ராமரின் சிரித்த முகமும், உடல் பாவனைகளும் நன்கு வந்துள்ளதாக அருண் கூறுவார். எங்கள் குடும்பத்தினர் இதனை மிகவும் பெருமையாக உணர்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

அருண் செய்துக்கிய குழந்தை ராமர் (Ram Lalla) சிலை 51 அங்குல உயரம் கொண்டது. இது ராமரின் ஐந்து வயது குழந்தை பிராயத்தை அடிப்படையாகக் கொண்டு வடிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சத்தீஸ்கரில் 'ட்ரை டே' அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.