ETV Bharat / bharat

ஜல்லிக்கட்டு தடையால் தமிழர்கள் பாரம்பரியம் பறிபோகும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

author img

By

Published : Nov 25, 2022, 1:41 PM IST

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்ந்தது என்றும் மிருக வதை மற்றும் மனித நேயத்திற்கு எதிரானது இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி, கருணை மற்றும் மனித நேயத்திற்கான சித்தாந்தங்களை மீறவில்லை என்றும், மிருகவதை தடைச் சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வதிடப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, கர்நாடாக மாநிலத்தில் நடக்கும் கம்பாலா, மராட்டியத்தில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தையங்களில், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகவும், அந்த போட்டிகளை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன் மனு விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ள நிலையில், ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில், அரசிய சாசனத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஜல்லிகட்டு போட்டிக்கான அனுமதியில் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் என்று தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்டால் தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் அழிந்து போகும் என வாதத்தில் கூறப்பட்டது.

இதனிடையே குறுக்கிட்ட நீதிபதிகள், குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளில் காயங்கள் ஏற்படும் என்று தெரிந்துதான் கவனத்துடன் வீரா்கள் பங்கேற்கிறாா்கள் என்றும் விலங்குகளுக்கு சட்டப்படி இந்த சுதந்திரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றனர். மேலும் இந்தப் போட்டிகளில் உயிரிழப்பு, காயமடைந்தவவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் விலங்குகளும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு தாக்கல் செய்த புகைப்படங்கள், ஆவணங்கள் முரணானதாக இருப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: SIM Box மூலம் வெளிநாடுகளுக்கு அழைப்பு - 2 பேருக்கு தீவிரவாத தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.