ETV Bharat / bharat

பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்பு - ஜே.பி. நட்டா!

author img

By

Published : Jul 17, 2023, 7:06 PM IST

JP Nadda
JP Nadda

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாமக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நாளை(ஜூலை. 18) டெல்லியில் நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளான. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில்ம் இன்றும் (ஜூலை. 17) நாளையும் (ஜூலை. 18) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இம்மாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏறத்தாழ 25 கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளை திணறடிக்கும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் அணி திரண்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை (ஜூலை. 18) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட மொத்தம் 38 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்து உள்ளார். தேசிய ஜனநாய கூட்டணியின் அணுகுமுறை மற்றும் நோக்கம் கடந்த ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளின் நேர்மறையான தாக்கத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் உற்சாகமாக இருப்பதாக நட்டா கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்த அணுகுமுறை, மக்களவை தேர்தல் வியூகம் உள்ளிட்ட கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி? எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முன்னிறுத்த காங்கிரஸ் திட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.