ETV Bharat / bharat

ISRO spy case: 2 முன்னாள் காவல் துறையினருக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை

author img

By

Published : Jul 26, 2021, 7:54 PM IST

Updated : Jul 26, 2021, 8:46 PM IST

ISRO spy case
ISRO spy case

விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கை ஜோடித்து கைது செய்து துன்புறுத்திய முன்னாள் காவல் துறையினரான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ்.துர்கா தத் ஆகிய இருவருக்கும் இரண்டு வார கால பிணை வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

கொச்சி(கேரளா): இஸ்ரோவில் உளவு பார்த்ததாக, பொய்யாக ஜோடிக்கப்பட்டு விஞ்ஞானி நம்பி நாராயணனை துன்புறுத்திய முன்னாள் கேரள மாநில காவல் துறையினர் இருவருக்கு இரண்டு வாரங்கள் இடைக்கால பிணை வழங்கி, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஞ்ஞானி நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கில், சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிணை வழக்கை விசாரித்த தனி நபர் நீதிபதி அமர்வு, முன்னாள் காவல் துறையினரான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ்.துர்கா தத் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருவதால் மீண்டும் அவர்களை வேறு ஒரு வழக்கில் கைது செய்யக்கூடாது என்று கூறி, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான இருவருக்கும் இரண்டு வாரகால பிணை வழங்கி உத்தரவிட்டது.

கடந்த மாதம் முதல் நடைபெறும் விசாரணை

இவ்வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளியாக கருதப்படும் காவல் துறை முன்னாள் அலுவலர்களான எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ். துர்கா தத் ஆகிய இருவர் மீதும், கடந்த மாதம் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு, திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த முதல் தகவல் அறிக்கையில், சதி மற்றும் பொய்யான ஆவணங்களை கட்டமைத்ததாக கேரள உயர் அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத்துறை அலுவலர்கள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான ஜோடிக்கப்பட்ட வழக்கு முதன்முறையாக விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது 1994ஆம் ஆண்டு போடப்பட்டது. நம்பி நாராயணனுடன் சேர்த்து விண்வெளி ஆய்வுத்திட்டங்களை உளவு பார்த்து விற்றதாக மற்றொரு இஸ்ரோ ஊழியர் ஒருவரும், 2 மாலத்தீவுகளைச் சேர்ந்த பெண்களும், ஒரு தொழிலதிபரும் கைது செய்யப்பட்டனர்.

சிபிஐ விசாரணை தொடங்கிய பின், நம்பி நாராயணன் மீது தொடுக்கப்பட்டது பொய்யான வழக்கு என்று நிரூபணமானது. இதைத்தொடர்ந்து அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத்தொடுத்து, இதுவரை ரூ.1.9 கோடி வரை இழப்பீட்டுத்தொகை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் நம்பி நாராயணனை துன்புறுத்திய காவல் துறையினர் குறித்த வழக்கை, சிபிஐ கடந்த மாதம் முதல் தூசி தட்டி விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க: நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

Last Updated :Jul 26, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.