ETV Bharat / bharat

ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

author img

By

Published : Aug 10, 2021, 6:13 AM IST

Updated : Aug 10, 2021, 9:08 AM IST

ஒன்றிய அமைச்சர் விளக்கம்
ஒன்றிய அமைச்சர் விளக்கம்

பருவநிலை மாற்றம் பிரச்சினையைச் சமாளிக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி: உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல்பூர்வ தகவல்களை அளிக்கும் ஐபிசிசி (பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு) ‘பருவநிலை மாற்றம் 2021’ என்னும் முதல் பணிக்குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்தும், மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக வெளியிட்டுள்ளது.

மேலும், அனைத்து நாடுகளும் தங்களது (கிரீன்ஹவுஸ் வாயு) பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்தினாலும் புவியின் சராசரி வெப்பநிலையானது மூன்று டிகிரி செல்சியசை தொட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளது. 1750ஆம் ஆண்டிற்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களின் செறிவுக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது, “பருவநிலை மாற்றம் குறித்து பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு வெளியிட்ட அறிக்கை, வளர்ந்த நாடுகளுக்கு உமிழ்வை (ஒலிப்புமுறை) உடனடியாக குறைத்து, தங்களது பொருளாதாரத்தை டி-கார்போனைசேஷன் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு வெளியிட்ட ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை வரவேற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், பருவநிலை மாற்றம் பிரச்சினையைச் சமாளிக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், பொருளாதார வளர்ச்சியிலிருந்து அதன் உமிழ்வை சீர்குலைக்கும் பாதையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியா உலகளாவிய காலநிலை மாற்றம் பிரச்சினையைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொருளாதார வளர்ச்சியிலிருந்து அதன் உமிழ்வைச் சீர்குலைக்கும் பாதையில் உள்ளது. அதற்கு பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு அறிக்கை ஒரு சான்று” என யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு அறிக்கையானது, 65 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, 195 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியப் பெருங்கடல் மற்ற கடல்களைவிட அதிக வேகத்தில் வெப்பமடைகிறது என்பதைத் தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், விஞ்ஞானிகள், இந்தியாவில் வெப்ப அலைகள், மழை, வெள்ளம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், “வளர்ந்த நாடுகள் உலகளாவிய கார்பன் பட்ஜெட்டில் நியாயமான பங்கைவிட அதிகமாக அபகரித்துள்ளன. நிகர பூஜ்ஜியத்தை அடைவது மட்டும் போதாது, ஏனெனில் நிகர பூஜ்ஜியம் வரை ஒட்டுமொத்த உமிழ்வுதான் வெப்பநிலையை நிர்ணயிக்கிறது. - {நிகர பூஜ்ஜியம் (கார்பன்-நடுநிலைமை)}

நடவடிக்கை எடுக்கும் அரசு

இது பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு அறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. வரலாற்று குவிப்பு உமிழ்வுதான் ஆதாரம் என்று இந்தியாவின் நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடு அனைத்து கிரீன்ஹவுஸ் வாயு (GHG) உமிழ்வு சூழ்நிலைகளின்கீழ் புவி வெப்பமடைதலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தெற்காசிய பருவமழைகளைப் பாதிக்கும் என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்துச் சூழ்நிலைகளிலும் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை நிகழ்வுகளின் தீவிரம், அதிர்வெண் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் வாயு மூலம் ஏற்படும் வெப்பமயமாதல் ஏரோசல் குளிரூட்டலின் மூலம் ஓரளவு ஈடுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சூரிய கூட்டணி, பேரிடர் மீளக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 2030ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட்டாக உயர்த்துவது, பருவநிலை மாற்ற பிரச்சினையைச் சமாளிக்க இந்தியா மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்

Last Updated :Aug 10, 2021, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.