ETV Bharat / bharat

இந்தியாவின் ரோபோக்கள் கட்டிய 3D தொழில்நுட்பத்திலான தபால் நிலையம்! அப்படி என்ன ஸ்பெஷல்

author img

By

Published : Aug 18, 2023, 10:59 PM IST

இந்தியாவில் முதல் முறையாக 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்திலான முற்றிலும் ரோபோ தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட்ட தபால் நிலையத்தை பெங்களூருவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்துவைத்தார்.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு(கர்நாடகா): நாட்டிலேயே முதல் முறையாக 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்திலான செங்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இல்லாத வகையில் முப்பரிமாண அச்சிடப்பட்ட தபால் நிலையம் பெங்களூருவில் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஆக.18) திறந்துவைத்தார். மெட்ராஸ் ஐஐடியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் படி, மொத்தம் 1021 சதுர அடி பரப்பளவில் 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இந்த அஞ்சல் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

முற்றிலும் தானியங்கி தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம் முழுக்க முழுக்க ரோபடிக் தொழில்நுட்பத்துடனான பிரிண்டர் முறையில் 3 அடுக்கு தரத்தில் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக இம்மாதிரியான கட்டடங்களை கட்டுவதற்கு 6-லிருந்து 8 மாதங்கள் வரை தேவைப்படும் சூழலில் கான்கிரீட்டால் உறுதியும், பாதுகாப்பும் கொண்ட வகையில் வெறும் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், செலவு மற்றும் நேரம் ஆகியவற்றை சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் முதல் முப்பரிமாண தபால் நிலைய கட்டடத்தை திறந்துவைத்தப் பின்னர், நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், ஆற்றல்மிக்க தலைவரான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, பாரம்பரியம் மாறாமல் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், வளரும் புதிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் புதிய கண்டுபிடிப்புகளுகளை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் உள்நாட்டிலேயே தொலைத்தொடர்பு துறையில் 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களை உருவாக்கியதாகவும், உலக தரத்தில் 'வந்தே பாரத்' போன்ற ரயில்களை உருவாக்க முடியும் என்பதை நமது நாடு நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

3D பிரிண்டிங் தொழில்நுட்ப வடிவமைக்கப்பட்ட குறைந்த செலவிலான, இந்த அஞ்சல் நிலைய கட்டடம் குறித்து தலைமை தபால் மாஸ்டர் ஜெனரல் ராஜேந்திர குமார் விளக்கினார். மெட்ராஸ் ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் பேராசிரியரும் முதல்வருமான மனு சந்தானம், 3D முப்பரிமாண தபால் அலுவலகம் கட்டுவது குறித்த தொழில்நுட்ப விவரங்களை நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார். இந்த கட்டடத்தினை லார்சன் மற்றும் டூப்ரோ லிமிடெட் நிறுவனம் கட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.